/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுற்றுலா தலங்கள் மேம்பாடுவிஜயவர்மன் வாக்குறுதிசுற்றுலா தலங்கள் மேம்பாடுவிஜயவர்மன் வாக்குறுதி
சுற்றுலா தலங்கள் மேம்பாடுவிஜயவர்மன் வாக்குறுதி
சுற்றுலா தலங்கள் மேம்பாடுவிஜயவர்மன் வாக்குறுதி
சுற்றுலா தலங்கள் மேம்பாடுவிஜயவர்மன் வாக்குறுதி
ADDED : அக் 05, 2011 02:24 AM
சேலம்: ''சேலம் அருகேயுள்ள குமரகிரி ஏரி சுத்தப்படுத்தப்பட்டு, பொதுமக்கள்
பொழுது போக்குவதற்கு வசதியாக படகு சவாரி வசதி செய்யப்படும்,'' என, சேலம்
மேயர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளர் விஜயவர்மன் கூறினார்.அவர்
கூறியதாவது:சேலம் நகர மக்கள் விடுமுறை நாட்களில் பொழுதுபோக்குவதற்காக,
பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். மூக்கனேரி பறவைகள் சரணாலயத்தை
புதுப்பித்து, சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன்.
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா சீரமைக்கப்பட்டு, சிறந்த பொழுதுபோக்கு
இடமாக மாற்றி மாநகராட்சியின் வரி வருவாய் அதிகப்படுத்தப்படும். அதற்கான
போக்குவரத்து வசதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மகாத்மா காந்தி
ஸ்டேடியத்தை, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டுக்காக மட்டும்
பயன்படுத்த நடவடிக்கை எடுப்பேன். சேலம் அருகேயுள்ள குமரகிரி ஏரியை
சுத்தப்படுத்தி, பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு வசதியாக படகு சவாரி வசதி
செய்யப்படும்.நகர்ப்புற மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு,
மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதுடில்லி, சண்டிகர் நகரில் உள்ளது போல்
நடைபாதை அமைக்கப்படும். மேலும் 'ஹைடெக் ஜிம்' அமைய நடவடிக்கை
எடுக்கப்படும்.சேலம் நகரை சுற்றிலும், குமரகிரி, கந்தாஸ்ரமம், ஊத்துமலை
மற்றும் நகர மலை பெருமாள் கோவில் போன்ற ஆன்மிக தலங்கள் மற்றும்
மாநகராட்சிக்கு அருகில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மிக
மற்றும் சுற்றுலா தல மேம்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


