நிபந்தனையை விலக்க தயார்: டில்லி போலீஸ்
நிபந்தனையை விலக்க தயார்: டில்லி போலீஸ்
நிபந்தனையை விலக்க தயார்: டில்லி போலீஸ்
UPDATED : ஆக 17, 2011 05:12 PM
ADDED : ஆக 17, 2011 04:47 PM
புதுடில்லி: உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னர் விதிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை போன்ற நிபந்தனையை விலக்கி கொள்ள தயார்.
7நாட்கள் வரை உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது என டில்லி போலீசார் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்னாவின் உடல்நிலை மோசமாகும் பட்சத்தில் தலையிட வேண்டியிருக்கும் டில்லி போலீசார் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே போலீசாரின் உறுதிமொழியை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என ஹசாரே குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை ஏற்க போலீசார் மறுத்து விட்டனர்.


