/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கடையநல்லூர் அருகே பைக் விபத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி : ஒருவர் படுகாயம்கடையநல்லூர் அருகே பைக் விபத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி : ஒருவர் படுகாயம்
கடையநல்லூர் அருகே பைக் விபத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி : ஒருவர் படுகாயம்
கடையநல்லூர் அருகே பைக் விபத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி : ஒருவர் படுகாயம்
கடையநல்லூர் அருகே பைக் விபத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி : ஒருவர் படுகாயம்
ADDED : செப் 13, 2011 12:21 AM
கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே ரோட்டு ஓரத்தில் இருந்த இரும்பு அறிவிப்பு பலகையில் பைக் மோதியதில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்தார். கடையநல்லூர் அருகேயுள்ள மங்களாபுரம் செட்டிபிள்ளைமார் தெருவை சேர்ந்தவர் அன்சாரி (17). இவரும், இவரது நண்பர் அய்யாபுரம் தெருவை சேர்ந்த காரூன் (17) ஆகிய இருவரும் அச்சம்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருகின்றனர். நேற்று கல்லூரி முடிந்ததும் இருவரும் அச்சம்பட்டியிலிருந்து கடையநல்லூருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக் மங்களாபுரம் அருகே வரும்போது எதிர்பாரதவிதமாக ரோட்டின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு அறிவிப்பு பலகையின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அன்சாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயமடைந்த காரூன் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


