/உள்ளூர் செய்திகள்/தேனி/சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் ஆகுமா?சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் ஆகுமா?
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் ஆகுமா?
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் ஆகுமா?
சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா தலம் ஆகுமா?
ADDED : ஆக 06, 2011 10:30 PM
கூடலூர்:தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து
காண்போரின் கண்ணுக்கு விருந்தாக பால் போல் கொட்டுகிறது சுரங்கனாறு
நீர்வீழ்ச்சி.
கேரளாவில் மழை பெய்யும் போது இந்த நீர்வீழ்ச்சியில் அதிகமாக
நீர் வரத்து இருக்கும். கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் தேசிய
நெடுஞ்சாலையில் இருந்து பார்த்தால் இந்த நீர்வீழ்ச்சி தெரியும்.
நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி வனப்பகுதியாக இருப்பதால் பொதுமக்கள்
அப்பகுதிக்கு செல்ல முடியாது. இதை சுற்றுலாத்தலமாக மாற்றினால் சுற்றுலா
பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது, கேரளாவில் பெய்து வரும்
மழையால் பால்போல் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சியை மெயின்ரோட்டில் இருந்து
ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் நின்று பார்த்து ரசித்த செல்கின்றனர்.


