இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது: அதிபர் ஒபாமா
இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது: அதிபர் ஒபாமா
இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நல்லது: அதிபர் ஒபாமா
ADDED : அக் 07, 2011 09:12 AM
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொட்பாக வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியா-பாகிஸ்தான் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு எல்லா தரப்பினரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதனை பாகிஸ்தான் புறக்கணிக்கிறது. மேலும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி குழுவினருடன், அந்நாட்டு உளவு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சமீபத்தில் நடந்த சம்பவங்களே இதற்கு சாட்சி. மேலும் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதும் ஒரு வகையில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யும் காரணமாக உள்ளது என்றார். இது சர்வதேச அளவில் பிரச்னையை உண்டாக்கும். அமெரிக்காவின் நலனை புறக்கணித்தால் விளைவுகள் ஏற்படும். மேலும் இந்தியாவுடன் நட்புடன் இருப்பதே பாகிஸ்தானுக்கு நலம் என எச்சரித்தார்.


