/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வயது வரம்பு தளர்த்தும் முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்வயது வரம்பு தளர்த்தும் முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்
வயது வரம்பு தளர்த்தும் முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்
வயது வரம்பு தளர்த்தும் முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்
வயது வரம்பு தளர்த்தும் முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்
ADDED : செப் 08, 2011 01:52 AM
கோவை : அரசு உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்த்துவோர் குழு கூட்டத்தில், 92 மாற்றுத்திறனாளிகள் பயன் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்குவதற்கான வயது வரம்பு தளர்த்துவோர் குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் முஸ்தபா கமால் பாட்சா முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜேஸ்மின், சிறப்பு நல மருத்துவர்கள், அனைத்து தாலுகாவை சேர்ந்த சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்துக்காக, முன் கூட்டியே 160 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவர்களில் 98 பேர், நேரில் வந்திருந்தனர்; 62 பேர் வரவில்லை. குழுவினர் பரிசீலனை முடிவில், 'விண்ணப்பித்தவர்களில் 92 பேர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள்' என்று முடிவு செய்யப்பட்டது.


