/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/"நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்'"நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்'
"நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்'
"நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்'
"நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள்'
ADDED : அக் 11, 2011 02:21 AM
திருவள்ளூர் : மாவட்டத்தில், ஊராட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் நான்கு நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஊராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய, வாக்காளர்கள் நான்கு ஓட்டுகள் போடவேண்டும். இதற்காக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிற ஓட்டுச் சீட்டும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை நிற ஓட்டுச் சீட்டும், ஊராட்சித் தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற ஓட்டுச் சீட்டும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டும் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், இரு வார்டுகளுக்கு ஒரே ஓட்டுச் சாவடியாக இருப்பின், பிறிதொரு வார்டுக்கான ஓட்டுச் சீட்டுகள் வெளிர்நீல நிறத்தில் இருக்கும்.


