/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பூத் சிலிப் வழங்கும் பணிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்பூத் சிலிப் வழங்கும் பணிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்
பூத் சிலிப் வழங்கும் பணிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்
பூத் சிலிப் வழங்கும் பணிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்
பூத் சிலிப் வழங்கும் பணிகள்: கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : அக் 12, 2011 02:26 AM
விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலுக்கான பூத் சிலிப் வழங்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியது.
அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு தேடி பூத் சிலிப் வழங்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு வீடு தேடி பூத் சிலிப்புகள் வழங்கப்படுகிறது.இந்தப் பணிகளை கலெக்டர் மணிமேகலை நேற்று துவக்கி வைத்தார். விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி ஊராட்சிக்கு நேரில் சென்ற கலெக்டர், அங்கு வீடு, வீடாக சென்று பெயர், முகவரி, அடையாளங்களை சரி பார்த்து பூத் சிலிப்களை வழங்கினார்.விழுப்புரம் ஆர்.டி.ஓ., பிரியா, தாசில்தார் ராஜேந்திரன், பி.டி.ஓ., ரங்கநாதன், பி.ஆர்.ஓ., லிங்கம், ஏ.பி.ஆர்.ஓ., ஏகாம்பரம், வருவாய் ஆய்வாளர் ஆதிசக்தி, வி.ஏ.ஓ., துரை உடனிருந்தனர்.பின்னர் கலெக்டர் மணிமேகலை கூறுகையில், மாவட்டத்தில் 73 திருநங்கைகள் உள்ளிட்ட 22 லட்சத்து 40 ஆயிரத்து 284 வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கும் பணிநேற்று துவங்கியுள்ளது. புதியதாக விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரத்து 505 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி வாக்காளர் துணை பட்டியலுடன் இவைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. துணை பட்டியலில் புகைப்படம் இல்லாததால், இவர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 14 ஆவணங்களில் ஒன்றை காட்டி ஓட்டளிக்கலாம் என்றார்.


