/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆசிரியர் பற்றாக்குறை கல்வித்தரம் கேள்விக்குறிஆசிரியர் பற்றாக்குறை கல்வித்தரம் கேள்விக்குறி
ஆசிரியர் பற்றாக்குறை கல்வித்தரம் கேள்விக்குறி
ஆசிரியர் பற்றாக்குறை கல்வித்தரம் கேள்விக்குறி
ஆசிரியர் பற்றாக்குறை கல்வித்தரம் கேள்விக்குறி
ADDED : ஆக 11, 2011 10:37 PM
கொடைக்கானல் : கொடைக்கானல் மேல்மலை கிராம அரசு பள்ளிகளில் நீண்ட நாட்களாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படவில்லை.
மேலும், 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களால், கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது. பூம்பாறை, கவுஞ்சி, கீழானவயல், போலூர், மன்னவனூரில் அரசு பள்ளிகள் உள்ளன. நீண்ட தூர பயணம், பஸ் வசதியின்மையால் அதிகாரிகளின் ஆய்வு குதிரைக்கொம்பாக உள்ளது. தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இரு ஆசிரியர் பள்ளிகளில் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர். ஆசிரியர்களின் 'டிமிக்கி', மலைப்பகுதி அரசு பள்ளிகளில் எழுதப்படாத விதியாக உள்ளது. தொடர் அரசு விடுமுறை என்றால் ஆசிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். சமீபத்தில், பேத்துப்பாறையில் அலுவலக பணிக்காக தலைமை ஆசிரியர் பள்ளியை பூட்டி சென்றார். இதை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' வைக்க வேண்டும்.


