Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பக்கவாத்தியம்/பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

பக்க வாத்தியம்

PUBLISHED ON : ஆக 12, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

'தேர்தல் செலவாவது மிஞ்சும்...!'



திருப்பூரில் கம்பன் கழக மூன்றாம் ஆண்டு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் அப்துல் காதர் பேசும்போது, 'கம்பன் இருந்த காலத்தில், அரசன் இறந்து விட்டால் அல்லது பட்டம் சூட்டிக் கொள்ள வாரிசு இல்லா விட்டால், பட்டத்து யானையின் துதிக்கையில் மாலை கொடுத்து, கூட்டத்துக்குள் அனுப்புவர். மலர் மாலையை யார் கழுத்தில் யானை போடுகிறதோ, அவரே புதிய அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கால ஆட்சியாளர்களை மக்கள் தேர்வு செய்கின்றனர். அக்காலத்தில் யானை தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் கூட நல்லவர்களாக இருந்தனர். ஆனால், மக்களால் சிறந்த ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை...' என்றார்.



கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், 'தொகுதிதோறும் வேட்பாளர்களை வரிசையாக நிற்க வைத்து யானையிடம் மலர் மாலை கொடுக்கலாம்... யானை யாருக்கு மாலை போடுகிறதோ, அவரை தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிச்சுடலாம்... நல்ல ஆட்சியாளர் கிடைக்கா விட்டாலும், தேர்தல் செலவாவது மிச்சமாகும்...' என, சத்தமாக, 'கமென்ட்' அடித்ததும், கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.



'அன்பு காட்டுகிறார்...!'மதுரையில் அரசு பணியாளர் சங்க கூட்டம் ஒன்றில், மாநில தலைவர் கு.பாலசுப்ரமணியன் பங்கேற்றார். அவர் பேசும்போது, '1978ல், இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடத்தி, அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை பெற்றுத் தந்தோம். இதை இன்று அனுபவிப்பவர்கள், இந்த பின்னணியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டசபை தேர்தலுக்கு முன், கோரிக்கைகளை எட்டு கட்சிகளுக்கு கடிதமாக அனுப்பினோம். பிரசாரம் துவங்கும் முன், ஜெயலலிதா என்னை அழைத்துப் பேசினார்.



தலில் அவர் சொன்ன வார்த்தை, 'நான் உங்கள் எதிரி அல்ல; அன்புச் சகோதரி' என்றார். ஒருகாலத்தில் நம்மை மிரட்டியவர், இன்று அன்பு காட்டுகிறார். நம் சங்கத்தின் ஒற்றுமை பலமே இதற்கு காரணம்' என்றார்.இதைக் கேட்ட அரசுப் பணியாளர் ஒருவர், 'தொழிலாளர்கள் மறந்தாலும், இவர், 'டெஸ்மா, எஸ்மா'வை மறைமுகமாக ஞாபகப்படுத்தறாரே...' என்று கிசுகிசுத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us