ADDED : ஆக 30, 2011 12:04 AM
வேலூர்: வேலூர் அடுத்த கொண வட்டம் அரசு மேல் நிலைப் பள்ளியில் நாராயணி மருத்துவனை, ஆராய்ச்சி மையம் மற்றும் காளியப்பன் அறிக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
நாராயணி மருத்துவனை, ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் அரவிந்த் நாயர் தலைமை வகித்தார். மேயர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். கவிஞர் இலக்குமதி வரவேற்றார். விழாவில் காளியம்மன் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீதர், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் பாபு, உறுப்பினர்கள் அஜய் குமார், மூர்த்தி, நிர்மல், சரத் செட்டி, மனோரகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில், கலந்து கொண்ட 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.


