/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தெருவோர வியாபாரிகள் நலன் காக்கும் உத்தரவை அமல்படுத்த கோரிக்கைதெருவோர வியாபாரிகள் நலன் காக்கும் உத்தரவை அமல்படுத்த கோரிக்கை
தெருவோர வியாபாரிகள் நலன் காக்கும் உத்தரவை அமல்படுத்த கோரிக்கை
தெருவோர வியாபாரிகள் நலன் காக்கும் உத்தரவை அமல்படுத்த கோரிக்கை
தெருவோர வியாபாரிகள் நலன் காக்கும் உத்தரவை அமல்படுத்த கோரிக்கை
ADDED : அக் 06, 2011 12:59 AM
புதுச்சேரி : மத்திய அரசின், தெருவோர வியாபாரிகள் நலன் தொடர்பான உத்தரவை
உடனடியாக அமலாக்க வேண்டும் என புதுச்சேரி நகர இரவு நேர டிபன் மற்றும்
சிறுகடை வியாபாரிகள், தொழிலாளர்கள் சங்கம்(சி.ஐ.டி.யூ.,) கேட்டுக்
கொண்டுள்ளது.இதுகுறித்து கவுரவத் தலைவர் முருகன், தலைமைச் செயலரிடம்
அளித்துள்ள மனு: நடைபாதை வியாபாரிகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய
தொழிலுக்கு உதவும் வகையில் பல்வேறு சட்டத் திருத்தங்களையும் முன்மொழிந்து
நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சரகம் புதுச்சேரி
அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரி அரசு, இது சம்பந்தமாக
எடுத்த நடவடிக்கை பற்றிய விஷயங்களை 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்
தெரியப்படுத்தவும் கோரியுள்ளது.
இன்றைய தேதி வரை புதுச்சேரி அரசு, மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்த எந்த
முயற்சியும் எடுக்கவில்லை. புதுச்சேரி போலீஸ் துறையின் நடவடிக்கைகள்,
மத்திய அரசின் நோக்கத்தையும் கொள்கையையும் முறியடிப்பதாக உள்ளன. பல
ஆண்டுகளாக இரவு நேரங்களில் செயல்பட்டு வந்த தெருவோர டிபன் கடைகளை இரவு 11
மணிக்குள் மூட வேண்டுமென கடந்த ஆண்டு ஜூன் மாதம், போலீஸ் துறை வாய்மொழி
உத்தரவிட்டு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக 3000க்கும் மேற்பட்ட
தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஐ.ஜி., முன்னாள் தலைமைச்
செயலர், உள்துறை செயலர், முதல்வர் ஆகியோரிடம் பலமுறை முறையிட்டும் எந்தப்
பலனும் இல்லை. அண்ணாசாலை அம்பலத்தடையார் மடம் சந்திப்பில் செயல்பட்ட, இரவு
நேர டிபன் கடையின் பொருட்களை ரோட்டில் வீசி, தொழிலாளியை போலீசார் தாக்கி
உள்ளனர்.அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே நகர்ப்புற வேலைவாய்ப்பு
மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சரகம் அனுப்பிய உத்தரவை புதுச்சேரியில்
உடனடியாக அமலாக்கத் தேவையான நடவடிக்கைகளை தலைமைச் செயலர் எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


