Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கப்பலில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

கப்பலில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

கப்பலில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

கப்பலில் தவறிவிழுந்து தொழிலாளி பலி

ADDED : ஜூலை 28, 2011 01:25 AM


Google News

தூத்துக்குடி : தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் கடல் ஆழப்படுத்தும் பணியில் வேலை பார்த்து வந்த வெளிநாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தவறி விழுந்ததில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்கட்டமைப்பு, கடல் ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பணியில் உள்நாட்டைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடல் ஆழப்படுத்தும் பணி கப்பல்கள் மூலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோ (55) என்பவர் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது கப்பலில் உள்ள ரோப்பை வெளியே எடுக்க முயற்சி செய்ததாகவும், ரோப் அறுந்து நிலை தடுமாறி அவர் கப்பலிருந்து தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயங்களுடன் அடிபட்டு மயங்கிய நிலையில் இருந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து புகாரின் பேரில் கடல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us