/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கயத்தாறு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழாகயத்தாறு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
கயத்தாறு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
கயத்தாறு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
கயத்தாறு அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா
ADDED : ஆக 28, 2011 01:05 AM
கயத்தாறு : கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17.5 லட்சம் மதிப்பீட்டில் 5 புதிய வகுப்பறைகளை கோவில்பட்டி சட்டசபை உறுப்பினர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 17.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 5 புதிய வகுப்பறைகளின் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சௌந்திரநாயகி தலைமை வகித்தார். கயத்தாறு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயப்பிரியா செல்வகுமாரி, கோவில்பட்டி பள்ளி துணை ஆய்வாளர் விஜயன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி எம்எல்ஏ.,கடம்பூர் ராஜூ புதிதாக கட்டப்பட்ட 5 வகுப்பறைகளை திறந்து வைத்தார். இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் கயத்தாறு நகர செயலாளர் ராமசாமி, கடம்பூர் நகர துணை செயலாளர் சமுத்திரபாண்டியன், மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஜீவாபாண்டியன், கழக பேச்சாளர் அல்லிக்கண்ணன் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன் காப்புலிங்கம்பட்டி பஞ்.,செயலாளர் கணேசமூர்த்தி மற்றும் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் மணி நன்றி கூறினார்.


