/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வார்டு முழுவதும் தரமான சாலை : 14 வதுவார்டு ஷகினா பர்வின்வார்டு முழுவதும் தரமான சாலை : 14 வதுவார்டு ஷகினா பர்வின்
வார்டு முழுவதும் தரமான சாலை : 14 வதுவார்டு ஷகினா பர்வின்
வார்டு முழுவதும் தரமான சாலை : 14 வதுவார்டு ஷகினா பர்வின்
வார்டு முழுவதும் தரமான சாலை : 14 வதுவார்டு ஷகினா பர்வின்
ADDED : அக் 03, 2011 10:56 PM
சிவகங்கை : சிவகங்கை 14 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அ.ஷகினா பர்வின் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், கிடப்பில் இருந்த நேரு பஜார் ரோடு, பழக்கடை சந்து, ஆஷா தெருக்களில் சிமென்ட் ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. குப்பையில்லா தெருவாக மாற்ற அனைத்து வீடுகளுக்கும் இலவச குப்பை தொட்டி வழங்கப்படும். தொண்டிரோடு பாகம் 1ல் புதிய தெருவிளக்குகள் அமைக்கப்படும். அப்துல்ஹமீது தெரு, ஆஷா தெரு, பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் ஆகிய பகுதிகளில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.விடுபட்ட பகுதிகளில் 3 தொட்டிகள் அமைக்கப்படும்.'' என்றார். மனு தாக்கலின் போது தி.மு.க.நகர் மாணவர் அணி செயலாளர் அயுப்கான், 14வார்டு மகளிர் அணியினர் உடன் இருந்தனர்.


