ADDED : செப் 16, 2011 01:36 AM
பல்லடம்: பொங்கலூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி வேன், மாணவ, மாணவியர் 15 பேரை
நேற்று ஏற்றிக் கொண்டு தொட்டம்பட்டி நோக்கிச் சென்றது.
மாலை 4.30 மணிக்கு,
நல்லாக்கவுண்டம்பாளையம் புதூர் பிரிவு அருகே சென்றபோது, நிலை தடுமாறி
ரோட்டின் இடது புறமுள்ள குழிக்குள் இறங்கி, மீண்டும் ரோட்டுக்கு வந்து
வலதுபுறம் உள்ள பள்ளத்தில் முட்டி நின்றது. ஒன்பது பேர் காயம் அடைந்தனர்.


