/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/அன்னிய பொருளாதார கொள்கைக்கு எதிராக போர்க்கொடி : நாடுதழுவிய போராட்டம்அன்னிய பொருளாதார கொள்கைக்கு எதிராக போர்க்கொடி : நாடுதழுவிய போராட்டம்
அன்னிய பொருளாதார கொள்கைக்கு எதிராக போர்க்கொடி : நாடுதழுவிய போராட்டம்
அன்னிய பொருளாதார கொள்கைக்கு எதிராக போர்க்கொடி : நாடுதழுவிய போராட்டம்
அன்னிய பொருளாதார கொள்கைக்கு எதிராக போர்க்கொடி : நாடுதழுவிய போராட்டம்
ADDED : ஆக 07, 2011 01:01 AM
மார்த்தாண்டம் : வர்த்தகத்தில் வெளிநாட்டு வணிகர்களை அனுமதிப்பதற்கு எதிராக வரும் 15ம் தேதி முதல் நாடுதழுவிய போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக வணிகர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் தெரிவித்தார்.சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு வியாபாரிகளை அனுமதிப்பதற்கு நாடுதழுவிய அளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக வணிகர் சங்க நிர்வாகிகள் மாநில அளவில் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் மார்த்தாண்டத்தில் வியாபாரிகளிடம் கலந்துரையாடல் நடத்தினார்.மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த விழாவிற்கு தலைவர் தொழிலதிபர் அல்அமீன் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜா செல்வின்ராஜ் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், முன்னாள் பொருளாளர் அலெக்சாண்டர், முன்னாள் செயற்குழு உறுப்பினர் அயூப்கான், சென்னை புரசை நேரு பூங்கா வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் செல்தூள் வியாபாரிகள் சங்க தலைவர் சிவதாசன், இணை செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வணிகர் சங்க மாநில பொதுச்செயலாளர் தேவராஜ் பேசியதாவது:வரிவிதிப்பு இல்லாத தமிழக பட்ஜெட்டை வரவேற்கிறோம். ஜவுளிகளுக்கு இரண்டு சதவீதம் வாட் வரி விதிக்கப்பட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தமிழக அரசு நடவடிக்கை எடுத்து ரத்து செய்தது. சமையல் எண்ணெய்க்கும் வரி உள்ளது. இதையும் ரத்து செய்வதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.
அன்னிய பொருளாதார கொள்கைக்கு 51 சதவீதம் அனுமதியளிப்பதற்கு மத்திய அரசு யோசனையில் உள்ளது. இதை அனுமதித்தால் சிறுதொழில்கள் முழுவதும் அழிந்துவிடும். அன்னிய பொருளாதார கொள்கையை அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முழுமூச்சில் அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தையும் அடியோடு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமிழக வணிகர் சங்க பொதுச்செயலாளர் தேவராஜ் பேசினார்.


