/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/காங்., வேட்பாளர்கள் ஜெயித்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள் : வசந்தகுமார் உறுதிகாங்., வேட்பாளர்கள் ஜெயித்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள் : வசந்தகுமார் உறுதி
காங்., வேட்பாளர்கள் ஜெயித்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள் : வசந்தகுமார் உறுதி
காங்., வேட்பாளர்கள் ஜெயித்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள் : வசந்தகுமார் உறுதி
காங்., வேட்பாளர்கள் ஜெயித்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள் : வசந்தகுமார் உறுதி
ADDED : அக் 11, 2011 01:56 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர்களை ஆதரித்து வசந்தகுமார் பிரசாரம் செய்தார்.
விழுப்புரம் காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் மாலை நடந்த பிரசார கூட்டத்தில் நகர் மன்ற சேர்மன் வேட்பாளர் அஞ்சலை செல்வராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காங்., வேட்பாளர்களை ஆதரித்து வர்த்தக பிரிவு காங்., மாநில தலைவர் வசந்தகுமார் பேசியதாவது : விழுப்புரம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அஞ்சலை செல்வராஜ் படித்தவர், பட்டம் பெற்றவர். ஓய்வு பெற்ற நீதிபதி. இவர் ஜெயித்தால் மக்களுக்கு சரியான நீதியை நிலைநாட்டுவார். அரசியலில் காங்., கட்சிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள். 1967ம் ஆண்டுக்கு பின் காங்., ஆட்சியில் இல்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகளாக மக்கள் மனதில் காங்., கட்சிக்கு என ஒரு தனிப்பெருமை உள்ளது. அதை வைத்து தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். காங்., கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் எந்த குற்றமும் செய்ய மாட்டார்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பளித்து இந்த தேர்தலில் காங்., வேட்பாளர்களை அரியனையில் அமர செய்யுங்கள். இவ்வாறு வர்த்தக பிரிவு காங்., மாநில தலைவர் வசந்தகுமார் பேசினார். நகர காங்., தலைவர் குலாம் மொய்தீன், வர்த்தக பிரிவு காங்., மாநில செயலாளர் சீனுவாசகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் தயானந்தம் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.


