/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
ஆனைமலை : கேரள மாநில தமிழ் வளர்ச்சி பணி இயக்கம் சார்பாக மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கொழிஞ்சாம்பாறையில் நடந்தது.
தமிழ் வளர்ச்சி பணி இயக்கத்தின் தலைவர் விக்டர் சார்லி தலைமை வகித்தார். தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர் அப்துல் கலீலூர் ரகுமான் விழாவை தொடங்கி வைத்தார். சித்தூர் அரசு விக்டோரியா மகளிர் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சிவன், பேராசிரியர் அந்தோணிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். 'தடைகள் எதுவும் இல்லையே' என்ற தலைப்பில் பாரதி மைந்தன் பொன்சிங், சூரியகாந்தன் ஆகியோர் தன்னம்பிக்கை பயிற்சியளித்தனர்.