/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் காயம்அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் காயம்
அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் காயம்
அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் காயம்
அரசு பஸ் கவிழ்ந்து 25 பயணிகள் காயம்
ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
ஓசூர்: அஞ்செட்டி அடுத்த கோட்டையூருக்கு ஓசூர் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து தினம் ஒரு டவுன் பஸ் செல்கிறது.
இந்த வழித்தடத்தில் இந்த ஒரு டவுன் பஸ் மட்டும் செல்வதால், பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது. உரிகம் அருகே சென்றபோது மலைப்பாதையில் 'எல்' வளைவுப்பாதையில் செல்லும்போது எதிரே கர்நாடகா பஸ் வந்தது. அந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் பஸ்ஸை திருப்பியபோது, திடீரென்று பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் மலைப்பாதைக்கு கீழே 25 அடி பள்ளத்தில் பஸ் விழாமல் இருக்க சாதூரியமாக செயல்பட்டார். பஸ் சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், கோட்டையூரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி நாகமணி மற்றும் சக்காரலப்பா (36), கரட்டியை சேர்ந்த சின்னவள் (40), சின்னபாப்பா (36) உள்ளிட்ட 25 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அஞ்செட்டி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அஞ்செட்டி போலீஸார் விபத்து குறித்த விசாரிக்கின்றனர்.


