/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நகர மைய பகுதியில் நூலக கட்டடம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் முடிவுநகர மைய பகுதியில் நூலக கட்டடம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் முடிவு
நகர மைய பகுதியில் நூலக கட்டடம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் முடிவு
நகர மைய பகுதியில் நூலக கட்டடம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் முடிவு
நகர மைய பகுதியில் நூலக கட்டடம் சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் முடிவு
ADDED : ஆக 30, 2011 10:44 PM
சிதம்பரம் : சிதம்பரம் மையப் பகுதியில் நூலகம் கட்ட இடம் தேர்வு செய்வது என நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிதம்பரம் நகரில் அனைத்து வசதிகளுடன் நவீன கிளை நூலகம் கட்ட நூலகத்துறை சார்பில் இடம் தேர்வு செய்து கொடுக்க நகராட்சியிடம் கோரப்பட்டது. அதையடுத்து வடக்கு மெயின்ரோடு உழவர் சந்தை இயங்கி வரும் அண்ணா கலையரங்க இடத்தில் நூலகம் கட்ட 4,000 சதுர அடி இடம் ஒதுக்கீடு செய்ய இடம் தேர்வு செய்யபட்டது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நூலகக் கட்டடம் கட்ட இடம் ஒதுக்குவது தொடர்பாக நகர மன்ற சிறப்புக் கூட்டம் தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது, உழவர் சந்தை இயங்கிவரும் அண்ணா கலையரங்கத்தில் நூலகம் கட்டினால் எந்த பயனும் இல்லை. நகரின் மையப் பகுதியில் நூலகம் கட்டினால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் அண்ணா கலையரங்கத்தை பயனுள்ள வகையில் நகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினர். அதையடுத்து நகர மைய பகுதியில் இடம் தேர்வு செய்து நூலகம் கட்ட ஒதுக்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


