ADDED : ஆக 01, 2011 02:52 AM
திண்டிவனம் : சாலை விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கடந்த 24ம் தேதி காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலத்த காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி அந்த நபர் இறந்தார். ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.