/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருச்சியில் 40 பவுன் திருட்டு போனதாக புகார் : அடகுவைத்து பெண் நாடகமாடியது அம்பலம்திருச்சியில் 40 பவுன் திருட்டு போனதாக புகார் : அடகுவைத்து பெண் நாடகமாடியது அம்பலம்
திருச்சியில் 40 பவுன் திருட்டு போனதாக புகார் : அடகுவைத்து பெண் நாடகமாடியது அம்பலம்
திருச்சியில் 40 பவுன் திருட்டு போனதாக புகார் : அடகுவைத்து பெண் நாடகமாடியது அம்பலம்
திருச்சியில் 40 பவுன் திருட்டு போனதாக புகார் : அடகுவைத்து பெண் நாடகமாடியது அம்பலம்
ADDED : ஜூலை 25, 2011 01:54 AM
திருச்சி: திருச்சியில் நகைகளை அடகுவைத்துவிட்டு திருட்டு போனதாக புகார் கொடுத்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை (50).
இவர் அதேபகுதியில் உள்ள பி.எல்.ஏ., மெடிக்கலில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா என்கிற லங்கேஸ்வரி (40). இவர்கள் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள். கடந்த இருநாட்களுக்கு முன் ராஜதுரை வேலைக்கு சென்ற பின், சித்ரா வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மீண்டும் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை, மூவாயிரம் ரூபாய் மற்றும் இரண்டு மொபைல்ஃபோன்கள் திருடப்பட்டிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜதுரை பாலக்கரை போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் உள்ளிட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டுக்கு நன்கு அறிமுகமானவரே நகையை எடுத்திருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து போலீஸாரின் சந்தேகம் வீட்டிலிருந்த ராஜதுரை மற்றும் சித்ரா மீது திரும்பியது. அவர்களிடம் தனித்தனியே நடத்திய விசாரணையில் சித்ரா தனது கணவனுக்கு தெரியாமல் நகைகளை பல இடங்களில் அடகு வைத்து விட்டு, நகைகள் திருட்டு போனதாக நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர் நகையை அடகுவைத்த இந்திய ஓவர்சீஸ் வங்கி, அடகு கடைகள் ஆகிய இடங்களுக்கு சென்ற பாலக்கரை போலீஸார், நகைகளை அடகு வைத்ததற்கான ஆவணங்களை திரட்டினர். அதன்பின்னரே சித்ரா தான் நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
தன்னுடைய தாயார் குடும்பத்துக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால், நகைகளை விற்றும், அடகு வைத்தும் சித்ரா கொடுத்து உதவியுள்ளார். அது கணவனுக்கு தெரிந்தால் பிரச்னை வருமே என்று நினைத்து திருட்டு போனதாக அவர் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கை ஒரேநாளில் உண்மையை கண்டுபிடித்த பாலக்கரை இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் பாலக்கரை போலீஸாரை, மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, டி.சி.,க்கள் ராமையன், ஜெயபாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.