/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி பணியில் வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை முடங்கும் அபாயம்உள்ளாட்சி பணியில் வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
உள்ளாட்சி பணியில் வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
உள்ளாட்சி பணியில் வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
உள்ளாட்சி பணியில் வங்கி ஊழியர்கள் பண பரிவர்த்தனை முடங்கும் அபாயம்
ADDED : அக் 07, 2011 10:47 PM
சிவகங்கை : உள்ளாட்சி தேர்தல் பணியில் வங்கி ஊழியர்களும் ஈடுபடுவதால், வங்கிகள் முழுமையாக செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்கு மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், கடந்த சட்டசபை தேர்தலில் இருந்து வங்கி ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ஒன்று முதல் 8 வரையிலான பணிக்கு அரசு, வங்கி ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி, நேற்று முதல் துவங்கியது.இதனால், வங்கிகளில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் திணறினர். சில வங்கிகளில் ஊழியர்கள் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு சென்றதால், வாடிக்கையாளர்கள் பணத்தை போட, எடுக்க மட்டுமே முடியும், பிற வங்கி பணிகளை செய்ய இயலாது என தெரிவித்துள்ளனர். தேர்தல் நாளான அக்.,17 மற்றும் 19ம் தேதிகளில் வங்கிகள் முற்றிலும் செயல்படாமல் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்தல் நாளான்று ஓட்டுச்சாவடி பணிகளுக்கு வங்கி ஊழியர்கள் அதிகளவில் செல்கின்றனர். அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. கையிருப்பில் உள்ள ஊழியர்களை கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை மட்டும் நடத்தப்படும், என்றார்.


