/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதிபேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
பேரூராட்சியில் நேர்மையான நிர்வாகம் : அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
வத்தலக்குண்டு : ''வத்தலக்குண்டு பேரூராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் நடத்தப்படும்,'' என, தலைவர் பதவி அ.தி.மு.க., வேட்பாளர் சுசித்ரா பாண்டியன் கூறினார்.
ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரது கோரிக்கைகளையும் நிறைவேற்ற உழைப்பேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் உபயோகத்தை படிப்படியாக குறைத்தல், மரக்கன்றுகள் நட்டு பாதுகாத்தல் போன்ற பணிகள் நிறைவேற்றப்படும். இறந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வாகனம், குளிர்சாதன பெட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். மகளிர் சுகாதார வளாகம் இல்லாத வார்டுகளில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாள்தோறும் குடிநீர் கிடைக்கும் வகையில் 3 வார்டுகளுக்கு ஒரு லட்சம் லிட்டர் கொள்அளவில் தொட்டி அமைக்கப்படும். மாதந்தோறும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், என்றார்.


