/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மின்வசதி இல்லாத விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் மோட்டார்மின்வசதி இல்லாத விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் மோட்டார்
மின்வசதி இல்லாத விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் மோட்டார்
மின்வசதி இல்லாத விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் மோட்டார்
மின்வசதி இல்லாத விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் மானியத்தில் மோட்டார்
ADDED : ஜூலை 26, 2011 11:11 PM
காரைக்குடி:''மின்வசதி இல்லாத விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியத்தில் டீசல் மோட்டார் வழங்கப்படும்,'' என, கல்லல் வட்டார விவசாய உதவி இயக்குனர் கணேசன் தெரிவித்தார்.அவர் கூறுகையில், ''பருவ மழையால், கல்லல் ஒன்றியத்தில் கண்மாய்களில் நீர்வரத்து உள்ளது.
நடப்பு ஆண்டு முதல் போக சாகுபடிக்கு ஏற்ற சூழல் உண்டு. இதற்கு ஏற்ற ரகமான ஆடுதுறை 39, பிபிடி 5204 , கோ - 43 சான்று விதைகள் கல்லல், குன்றக்குடி விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளது. கிலோ ஒன்றுக்கு 10ரூபாய், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் 5 ரூபாய் மானியத்தில் விதைகள் விற்கப்படும். வீரிய நெல் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு 50 ரூபாய் மானியத்தில், கே.ஆர்.எச்., 2 ரகம் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் கை மற்றும் விசை தெளிப்பான்கள் மானிய விலையில் கிடைக்கும். மின்வசதி இல்லாதவர்களுக்கு, 10,000 ரூபாய் மானியத்தில் மோட்டார் வழங்கப்படும். நிலக்கடலை, பயறு சாகுபடி செய்யும் விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் நீர் தெளிப்பான் கருவி வழங்கப்படும்,'' என்றார்.