/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/முகாமில் உள்ள குட்டியானைக்கு "சர்வீஸ்' புத்தகம் துவக்க முடியல...முகாமில் உள்ள குட்டியானைக்கு "சர்வீஸ்' புத்தகம் துவக்க முடியல...
முகாமில் உள்ள குட்டியானைக்கு "சர்வீஸ்' புத்தகம் துவக்க முடியல...
முகாமில் உள்ள குட்டியானைக்கு "சர்வீஸ்' புத்தகம் துவக்க முடியல...
முகாமில் உள்ள குட்டியானைக்கு "சர்வீஸ்' புத்தகம் துவக்க முடியல...
ADDED : அக் 07, 2011 12:47 AM
கூடலூர் : 'முதுமலை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியானைக்கு நிரந்தர பெயர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகம் நம்பிகுன்னு குடியிருப்பு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இரவு தாயை பிரிந்து தனியாக தவித்த குட்டியானையை வனத்துறையினர் மீட்டு அதன் தாயிடம் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். அதன் தாய் கிடைக்காததால், யானை குட்டியை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அழைத்து வந்து தனி அறையில் பராமரித்து வருகின்றனர். இனி இதன் தாய் கிடைக்காது என்பதால், குட்டி யானையை முகாமில் 25வது யானையாக நிரந்தரமாக பராமரிக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். இதுவரை உத்தரவு கிடைக்கவில்லை. இதனால், குட்டியானைக்கு நிரந்தர பெயர் வைப்பதிலும், அதற்கு சர்வீஸ் புத்தகம் துவக்கவும் முடியாத சுழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


