/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/"ஊழல்' இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் வாக்காளர்களுக்கு வைகோ உறுதி"ஊழல்' இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் வாக்காளர்களுக்கு வைகோ உறுதி
"ஊழல்' இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் வாக்காளர்களுக்கு வைகோ உறுதி
"ஊழல்' இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் வாக்காளர்களுக்கு வைகோ உறுதி
"ஊழல்' இல்லாத உள்ளாட்சி நிர்வாகம் வாக்காளர்களுக்கு வைகோ உறுதி
ADDED : அக் 08, 2011 01:13 AM
திருநெல்வேலி : உள்ளாட்சிகளில் ஊழலற்ற நிர்வாகம் நடக்க மதிமுவிற்கு ஆதரவு தர வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்காளர்களுக்கு எழுதிய கடிதம்:18 ஆண்டுகளாக மதிமுக தன்னல நோக்கின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பொதுத்தொண்டாற்றி வருகிறது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு அளிக்கப்படாமல் தடுத்தோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கடந்த 16 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.தென்னக நதிகளை இணைக்க பார்லிமென்ட் வரலாற்றில் முதல் முறையாக நதிநீர் இணைப்பு தனிநபர் மசோதா விவாதத்தை கொண்டு வந்து அதற்கு மக்கள் ஆதரவை திரட்ட 1,200 கி.மீ., நடைப்பயணம் மேற்கொண்டோம். முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் பேரணிகள், நடைப்பயணம், உண்ணாநிலைப்போராட்டம், கேரளா செல்லும் ரோடுகளில் மறியல் என தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க தொடர்ந்து அறப்போரில் ஈடுபட்டு வருகிறோம்.கடந்த சட்டசபைத்தேர்தலில் பங்கேற்கா விட்டாலும் தமிழக மக்கள் நலன் காக்க அனைத்து முனைகளிலும் உரிமைக்குரல் எழுப்பி மக்கள் மன்றத்தில் உழைத்து வருகிறோம். கூடன்குளம் அணு மின்நிலையம் அகற்றப்பட உறுதி பூண்டுள்ளோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க போராடி வருகிறோம்.
இலங்கைத்தமிழர்கள் படுகொலை குறித்து பிரசாரம், போராட்டம் நடத்தி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், மக்கள் கவனத்திற்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளோம். பேரறிவாளன், சாந்தன், முருகன் உயிரை காக்க கடமையாற்றி வருகிறோம்.நேர்மை, நாணயத்தை இரு கண்களாக மதிமுக போற்றி வருகிறது. ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை அமைக்க உறுதியளிக்கும் மதிமுக வேட்பாளர்களுக்கு உள்ளாட்சித்தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


