Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அடையாறில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

அடையாறில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

அடையாறில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

அடையாறில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்

ADDED : அக் 08, 2011 01:14 AM


Google News
அடையாறு:அடையாறு, சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளில், அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில், பத்து சவரன் தங்க நகைகளை, பைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.அடையாறு அடுத்த பெசன்ட் நகர் சி.பி.டபிள்யூ., குடியிருப்பில் வசிப்பவர் ஜோதி,35. இவர், நேற்று, தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ஜோதி அணிந்திருந்த நான்குசவரன் தங்க நகைகளை வழிப்பறி செய்து சென்றனர்.மற்றொரு சம்பவம்: பெசன்ட் நகர், மூன்றாவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மோகன்ராஜ். முன்னாள் ராணுவ அதிகாரி. இவரின் மனைவி உமா,56.

இவர், நேற்று, வீட்டிற்கு அருகில் வாக்கிங் சென்றபோது, பைக் கொள்ளையர்கள், உமாவிடம் இருந்த இரண்டுசவரன் தங்க நகையைப்பறித்துச் சென்றனர்.இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து, சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணிடம் நான்கு சவரன் வழிப்பறி: அடையாறு , இந்திரா நகர், மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் உமாசங்கர். வர்த்தகர். இவரின் மனைவி பத்மா,37. இவர், வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, பைக் கொள்ளையர்கள், பத்மாவிடம் இருந்து நான்குசவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இது குறித்து, அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us