ADDED : செப் 08, 2011 01:24 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர்
மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நாளை (செப்., 9) நடக்கிறது.நாளை மாலை 4
மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.
ஏற்பாடுகளை குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர்.* தர்மபுரி
கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ
மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி நாளை மாலை 4 மணிக்கு
நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.* காவேரிப்பட்டணம் அடுத்த
பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு
நாளை நடக்கிறது.
மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம்
பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து
வருகின்றனர்.
* ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில்
ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜையும்,
அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள்
செய்துள்ளனர்.


