Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறுநிதி நிறுவனங்களிடம் கவனமாக இருக்க சுய உதவிக் குழுக்களுக்கு கலெக்டர் அறிவுரை

குறுநிதி நிறுவனங்களிடம் கவனமாக இருக்க சுய உதவிக் குழுக்களுக்கு கலெக்டர் அறிவுரை

குறுநிதி நிறுவனங்களிடம் கவனமாக இருக்க சுய உதவிக் குழுக்களுக்கு கலெக்டர் அறிவுரை

குறுநிதி நிறுவனங்களிடம் கவனமாக இருக்க சுய உதவிக் குழுக்களுக்கு கலெக்டர் அறிவுரை

ADDED : ஆக 22, 2011 12:54 AM


Google News
கடலூர் : கணக்கு வைத்திருக்கும் வங்கியில் மட்டுமே சுய உதவிக்குழுவினர் கடன் பெற வேண்டுமென கலெக்டர் அமுதவல்லி கூறியுள்ளார்.

அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குறுநிதி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்களாகவும், வங்கி மற்றும் தேசிய நிறுவனங்களாகவும், பெரும் வணிக நிறுவனங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. குறுநிதி வழங்கும் நிறுவனங்களில் பல நிறுவனங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்குட்படாமல் குழுக்களுக்கு பயிற்சி அளிக்காமல் கடன் கொடுத்து அதிக வட்டியும் வசூலித்து கடன் சுமையை ஏற்றுகிறது. மேலும் குழுக்களிடம் இருந்து மறைமுக கட்டணமாக நுழைவுக் கட்டணம், கடன் விண்ணப்பக் கட்டணம், கடன் வழங்கும்போது செலுத்த வேண்டிய 10 சதவீதம் தொகை வசூலிக்கின்றன. இந்நிறுவனங்களால் வசூலிக்கப்படும் வட்டி விகிதத்துடன் இக்கட்டணங்களைச் சேர்த்தால் கடன் பெறும் பயனாளிகளிடம் இருந்து 35 முதல் 50 சதவீதம் வரை மறைமுக வட்டி வசூலிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சியை பாதிக்கிறது. சுய உதவிக் குழுவினர் கந்து வட்டிக்காரர்கள் போல் உள்ள சில நிறுவனங்களில் பணத் தேவைக்காக ஏமாறுவதை தவிர்க்க தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி மற்றும் கூட்டமைப்புகளில் மட்டுமே தேவைக்கேற்ப கடன் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us