/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தகவல் பெறுவது உரிமை முன்னாள் ஆணையர் பேச்சுதகவல் பெறுவது உரிமை முன்னாள் ஆணையர் பேச்சு
தகவல் பெறுவது உரிமை முன்னாள் ஆணையர் பேச்சு
தகவல் பெறுவது உரிமை முன்னாள் ஆணையர் பேச்சு
தகவல் பெறுவது உரிமை முன்னாள் ஆணையர் பேச்சு
ADDED : ஆக 06, 2011 10:48 PM
காந்திகிராமம்:''தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை பெறுவது ஒவ்வொரு
குடிமகனின் அடிப்படை உரிமை. உரிமையை தடுக்கும் அதிகாரம் யாருக்கும்
இல்லை,'' என, முன்னாள் தகவல் ஆணையர் ராமகிருஷ்ணன் பேசினார்.காந்திகிராம
பல்கலையில் மனித உரிமை குறித்த பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
பதிவாளர் நாராயணசாமி தலைமை வகித்தார். முன்னாள் தகவல் ஆணையர் பேசியது:கடந்த
1776 ல், சுவீடனில் தகவல் உரிமை சட்டம் அமலானது. நம்நாட்டில் 2004 ல்
வரைவு சட்டம் உருவாக்கப்பட்டு, 2005 ல் அமலாக்கப்பட்டது. தகவல் பெறுதல்,
ஆவணங்களை ஆய்வு செய்தல், மாதிரிகள் பெறுதலுக்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
தகவல்களை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. இதை மறுக்க, தடுக்க
யாருக்கும் அதிகாரம் இல்லை. இச்சட்டத்தை முறையாக பயன்படுத்தினால், அரசு
துறைகளில் முறைகேடுகளை தடுக்க முடியும். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டியது அவசியம், என்றார்.அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி
நிர்வாக துறை மாணவர்கள் பங்கேற்றனர்.


