Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

ADDED : அக் 04, 2011 10:30 PM


Google News

கடலூர் : உள்ளாட்சித் தேர்தலையொட்டி பிரசாரங்களுக்கு ஒலிப்பெருக்கிகளை இரவு 10 மணிக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தேர்தல் நன்னடத்தை விதிகள் முறைப்படி செயல்படுத்தும் நோக்கோடு, தேர்தல் காலங்களில் கூம்பு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்வரை தேர்தல் காலம் முழுவதும் தேர்தல் பிரசாரங்களுக்காக வாகனங்களில் ஒலிப்பெருக்கிகளையும் இரவு 10லிருந்து காலை 6 மணி வரை பயன்படுத்தக் கூடாது.யாதொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு நிலையான கூம்பு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டுமாயின் போலீஸ் அதிகாரியிடம் எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும்.அனைத்து ஒலிப்பெருக்கிகளும் பொது பிரசாரத்திற்கு அல்லது பொது கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்பட்டாலும், நடமாடும் வண்டிகளில் அல்லது வேறு வகையில் பயன்படுத்தப்பட்டாலும் அதை மேற்சொன்ன நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.மேற்சொன்ன எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் உள்ள எந்த ஒரு வாகனமும், ஒலிப்பெருக்கிகளுடன் அதனுடன் இணைந்த கருவிகளுடன் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us