/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஓம்காளி, ஜெய்காளி கோஷம் முழங்க மகிஷாசூரன் வதம்குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஓம்காளி, ஜெய்காளி கோஷம் முழங்க மகிஷாசூரன் வதம்
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஓம்காளி, ஜெய்காளி கோஷம் முழங்க மகிஷாசூரன் வதம்
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஓம்காளி, ஜெய்காளி கோஷம் முழங்க மகிஷாசூரன் வதம்
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா ஓம்காளி, ஜெய்காளி கோஷம் முழங்க மகிஷாசூரன் வதம்
உடன்குடி : குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்களின் ஓம்காளி, ஜெய்காளி கோஷத்துடன் மகிஷாசூரசம்ஹாரம் நடந்தது.
இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சரியாக இரவு 10.40 மணிக்கு கோயில் பூசாரி ராஜாபட்டர் அம்மன் அருளுடன் சூரனை வதம் செய்யும் சூலாயுதத்தை கோயில் கருவறையில் இருந்து எடுத்து வந்தார். அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அன்னை அமர்ந்து சூரன் முன்னே செல்ல அன்னை பின் தொடர்ந்து சென்றார். சரியாக இரவு 12 மணிக்கு அன்னை கடற்கரையில் எழுந்தருளினார். மகிஷாசூரன் அன்னையை மூன்று முறை வலம் வந்து மோதினான். அன்னை ஆக்ரோஷத்துடன் சூரனை இரவு 12.05 மணிக்கு வதம் செய்தான். அப்போது பக்தர்கள் ஓம்காளி, ஜெய்காளி என கோஷம் எழுப்பினர். தன் தலையுடன் மோதிய சூரன் அன்னையிடம் தோற்று யானைத் தலையுடன் அன்னையிடம் போருக்கு தயாரானான். சரியாக இரவு 12.15 மணிக்கு யானைத் தலையுடன் கூடிய சூரனை அன்னை வதம் செய்தான். உடனே எருமை தலையுடன் உருமாறிய சூரன் அன்னையிடம் அக்ரோஷமாக மோதினான். சரியாக இரவு 12.25 மணிக்கு எருமை தலையுடன் கூடிய அரக்கனை அன்னை போரிட்டு அழித்தால், சேவல் தலையுடன் உருமாறி சூரன் அன்னையின் கடுமையான கோபத்திற்கு ஆளானான். அகிலத்தையும் காக்கும் அன்னை முத்தாரம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களை காக்க 10 நாட்கள் கடும் விரதம் இருந்து கொடி அரக்கனை முற்றிலும் அழிக்க அக்ரோஷமாக மோதினான். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கைதட்டி ஓம்காளி, ஜெய்காளி என கோஷமிட்டனர். சரியாக இரவு 12.35 மணிக்கு சூரனை முற்றிலும் அன்னை அழித்தால். உடனடியாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் கடற்கரை மேடையில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு அன்னை சிதம்பரேசுவரர் கோயிலில் எழுந்தருளி அபிஷேக மேடையில் அபிஷேக ஆராதனையும், பின்னர் திருத்தேரில் அன்னைபவனி வந்து கோயில் கலையரங்கத்தில் சிறப்பு அபிஷேகு ஆராதனையும் நடந்தது. காலை 6 மணிக்கு அன்னை பூஞ்சப்பரத்தில் தெரு பவனி நடந்தது. குலசேகரன்பட்டணம் முழுவதும் அன்னை தெரு பவனி நடந்தது. அனைத்து மக்களும் அன்னைக்கு திருக்கணம் சாத்தினர். மாலை 5.30 மணிக்கு அம்மன் திருக்கோயில் வந்தடைந்ததும் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கும். அதனைத் தொடர்ந்து காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கும். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தங்களது விரதங்களை அசைவ உணவு அருந்தி விரதத்தை முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கும். இன்று (அக்.8ம் தேதி) காலை 6,8,10மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், பகல் 12 மணிக்கு முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன் ஏற்பாட்டில் அன்னைக்கு சிறப்பு பாலாபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது.மகிஷாசூரசம்கார நிகழ்ச்சியையொட்டி தமிழக அரசு சார்பில் சுமார் 150க்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திசையன்விளை, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் உடன்குடி மெயின் பஜாரில் ஒரு வழிப்பாதை அமலில் இருந்ததால் எந்த குளறுபடியுமில்லாமல் கோயிலுக்கு எளிதில் செல்ல முடிந்தது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் ரோட்டின் இரு புறங்களிலும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் உடன்குடி-குலசைரோடு, திருச்செந்தூர்-குலசை ரோட்டில் வாகன நெருக்கடி அதிகமானது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். உடன்குடியில் இருந்து குலசை வரை மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான பெண்கள், ஆண்கள் நடந்தே கோயிலுக்கு வந்தனர். சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் பக்தர்கள் அமர்ந்திருந்ததால் பக்தர்களை அகற்ற போலீசார் மிகுந்த சிரமப்பட்டனர். முன் ஏற்பாடுகளை போலீசார் செய்யாததால் திடீரென பக்தர்களை அகற்ற மிகுந்த சிரமப்பட்டனர். குறிப்பாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு தூத்துக்குடி எஸ்.பி.,நரேந்திரன்நாயர், ஏடிஎஸ்பி.,சாமித்துரை வேலு ஆகியோர் வந்திருந்ததால் போலீசார் பெரும்பாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலே கவனம் செலுத்தினார்கள். முதன்முதலாக கடற்கரையில் கூடியிருக்கும் பக்தர்கள் வசதிக்காக சூரசம்ஹார நிகழ்ச்சியை வண்ணத்திரையில் காண்பித்தனர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் மனோகரன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன், மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் பரமன்குறிச்சி ஜெயக்குமார், உடன்குடி ஒன்றிய அதிமுக.,செயலாளர் அம்மன் நாராயணன், உடன்குடி ஒன்றிய திமுக.,செயலாளர் சக்திவேல், மாவட்ட காங்.,பொதுச் செயலாளர் நடராஜன், உடன்குடி வட்டார காங்.,தலைவர் சிவசுப்பிரமணியன், திருச்செந்தூர் சட்டசபை தொகுதி காங்.,ஜனநாயக பேரவை செயலாளர் பிச்சிவிளை சுதாகர், திருச்செந்தூர் சட்ட சபை தொகுதி இளைஞர் காங்.,செயலாளர் நேசபுரம் முத்துக்குமார், உடன்குடி ஒன்றிய தேமுதிக.,செயலாளர் நேசபுரம் செல்வகுமார், மாநில மதிமுக.,பொதுக்குழு உறுப்பினர் குலசை சின்னத்துரை, குலசை ரவி, உடன்குடி ஒன்றிய மதிமுக.,செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி மதியழகன், உடன்குடி ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சிவலூர் சாரதி, குலசை ஊராட்சி கழக செயலாளர் குலசை சங்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் மரியம்சேர்மத்துரை, மாவட்ட பஞ்.,கவுன்சிலர் மனோஜ், வக்கீல் பாலசுப்பிரமணியன், பரமன்குறிச்சி இளங்கோ, தாண்டவன்காடு முனைவர் கார்த்திகேயன், முருங்கை மகாராஜன், வெங்கட்ராமானுஜபுரம் பஞ்.,தலைவர் ராஜ்குமார், தூத்துக்குடி மாவட்ட ராகுல் பிரியங்காகாந்தி மகத்துவ பேரவை தலைவர் பொன்ஆதித்தன், தாண்டவன்காடு சந்திரசேகர், அருள்செல்வன், கொட்டங்காடு செந்தில், முல்லை பாலசுப்பிரமணியன், உடன்குடி ஒன்றிய திமுக.,துணை செயலாளர் அரிகிருஷ்ணன், சிவலூர் சுந்தர்ராஜ், ஜெகதீஷ்வரன், சமூக சேவகன் தீதத்தாபுரம் அருள்ராமச்சந்திரன், முத்துகிருஷ்ணன், உடன்குடி வட்டார வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் சுதாகர், பொருளாளர் சைமன், கல்லாமொழி ராஜதுரை, சித்ரா டைமண்ட் கோவிந்தராஜன், உடன்குடி ஒன்றிய பாஜக.,பொதுச் செயலாளர் ஜெயக்குமார், உடன்குடி வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, உடன்குடி ஒன்றிய திமுக.,பிரதிநிதி சீர்காட்சி மகாலிங்கம், சோமநாதபுரம் உதயசூரியன், கொம்மடிக்கோட்டை காசியானந்தன், வெள்ளாளன்விளை ஊராட்சி அதிமுக.,செயலாளர் வேல்முருகன், தேரியூர் சத்தியநாராயணன், உடன்குடி வட்டார காங்.,சேவாதள தலைவர் சிவலூர் முருகேசன், தேரியூர் முருகேசன், செல்வம் ஜூவல்லரி சண்முகசுந்தரம், செல்வம், உடன்குடி ஒன்றிய அண்ணா தச்சு தொழிலாளர் சங்க செயலாளர் அன்புராஜ், ராம்பிரசாத் சில்க் ராம்குமார், உடன்குடி நகர திமுக.,முன்னாள் செயலாளர் கனகலிங்கம், பாலசிவசங்கர், முத்துகோபால், லெட்சுமிபுரம் பஞ்.,முன்னாள் தலைவர் ஆதிலிங்கம், பெரியபுரம் வேல்ஆதித்தன், பிரபாகர்முருகராஜ், கார்த்தீசன், உடன்குடி ஒன்றிய அஇசமக.,செயலாளர் தயாளன், நகர செயலாளர் ஜெயசங்கர், காமராஜர் நாடார் இளைஞர் பேரவை தலைவர் கார்த்திகேயன், உடன்குடி நகர திமுக.,செயலாளர் பிரபாகர், வைத்திலிங்கபுரம் கிருஷ்ணமந்திரம், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தரம், சந்தையடியூர் வாசுதேவன், ரவிராஜா, தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி செயலாளர் கொட்டங்காடு ரவிகிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றிய தேமுதிக.,செயலாளர் மணல்மேடு செந்தில்குமார், ராமசாமிபுரம் தமிழ்வீரன், பெருமாள்புரம் ஜெயராமன், எல்.எஸ்.ஜூவல்லர்ஸ் லெட்சுமணன், கோடங்கிபாளையம் செந்தூரபாண்டியன், கொட்டங்காடு சத்தியமூர்த்தி உடன்குடி ஒன்றிய அதிமுக.,மகளிர் அணிச் செயலாளர் லட்சுமி, ஒன்றிய தேமுதிக.,இளைஞர் அணி செயலாளர் சதீஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் மந்திரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சங்கர், ஊழியர் டிமிட்ரோ மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


