ADDED : ஆக 22, 2011 11:20 PM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில் காந்திகநகரில்
ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை
வகித்தார். நகர செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். காந்திநகர்
நிர்வாகி கனிபாய் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள்
எம்.பி.,சீனிவாசன் கலந்துகொண்டார்.
தொகுதி செயலாளர் கனகதுரை, ஒன்றிய பேரவை செயலாளர் மருதராஜ், சேவுகம்பட்டி
நகர செயலாளர் மாசானம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வளர்மதி, தலைமை நிலைய
பேச்சாளர் லியாகத்அலிகான், மின் வாரிய பொதுசெயலாளர் காசி, நிர்வாகிகள்
நல்லமுகம்மது, ஜாகீர் உட்பட பலர் பங்கேற்றனர். சிறுபான்மை பிரிவு செயலாளர்
ஜான் நன்றி கூறினார்.


