ADDED : ஆக 03, 2011 01:42 AM
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு ஆண்டு தோறும் அளிக்கப்படும் துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று கடலூர் அடுத்த கேப்பர் மலையில் நடந்தது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் பணிபுரி யும் போலீசாருக்கு ஆண்டு தோறும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள 1832 பேருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி கடலூர் அடுத்துள்ள கேப்பர் மலை மைதானத்தில் நேற்று துவங்கியது. இங்குள்ள துப்பாக்கி சுடும் மைதானத்தில் தினம் 100 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியினை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் சவுந்தர்ராஜன், ஆய்வாளர் ஜயம்பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் பயிற்சி அளித்தனர்.


