/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காங்.,கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவுகாங்.,கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
காங்.,கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
காங்.,கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
காங்.,கட்சிக்கு முஸ்லிம் லீக் ஆதரவு
ADDED : செப் 24, 2011 10:05 PM
சிவகாசி : உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சிக்கு, விருதுநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
விருதுநகர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் இப்ராகீம்ஷா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் வரவேற்றார். பொருளாளர் முகமது இஸ்மாயில் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தலில் காங்., கட்சியை ஆதரிப்பது, வெற்றிக்கு பாடுபடுவது, விருதுநகர் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள், கட்சியின் தனி சின்னத்தில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


