ஜவகர் பள்ளியில் கணிதவியல் கண்காட்சி
ஜவகர் பள்ளியில் கணிதவியல் கண்காட்சி
ஜவகர் பள்ளியில் கணிதவியல் கண்காட்சி
ADDED : ஆக 27, 2011 11:24 PM
நெய்வேலி : நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நவீன கணிதவியல் கண்காட்சி நடந்தது.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளியில் கணிதப் பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் பள்ளி முதல்வர் யசோதா அறிவுறுத்தலின் பேரில் நவீன முறையில் கணிதவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. மேலும், கே.ஜி., மாணவ, மாணவிகளுக்கு நிறங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் புளூ டே கொண்டாடப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் காந்தா குளோ மேற்பார்வையில் ஆசிரியர்கள் சுமதி, பார்த்தீபன், அஜிதா விஜயலட்சுமி, செல்வம், சுந்தரமூர்த்தி செய்திருந்தனர்.


