மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு
மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு
மும்பை குண்டுவெடிப்பு: பலி 25 ஆக உயர்வு
ADDED : ஜூலை 29, 2011 02:20 AM
மும்பை: மும்பையில் மூன்று இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் கடந்த 13-ம் தேதி ஒபேரா ஹவுஸ், தாதர், ஜவேரி பஜார் என மூன்று இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பின் போது காயமடைந்த வெல்லாப்காடியா (48) என்பவர் மும்பையில் உள்ள சாயீப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 5 மணியளவில் சிகிச்சசை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மும்பை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தவிர மும்பையின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில்(ஐ.சி.யு) வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


