/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரொக்கம் திருட்டு :கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கம்பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரொக்கம் திருட்டு :கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கம்
பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரொக்கம் திருட்டு :கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கம்
பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரொக்கம் திருட்டு :கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கம்
பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரொக்கம் திருட்டு :கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கம்
ADDED : ஆக 03, 2011 01:17 AM
கவுண்டம்பாளையம் : கவுண்டம்பாளையத்தில் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் எஸ்.பி.நகரை சேர்ந்தவர் முகமது சபீர் (45). சவுதி அரேபியாவில் வியாபாரம் செய்கிறார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, வீட்டுக்கு வருவது வழக்கம். சில நாட்களுக்கு முன் கோவை வந்த முகமது சபீர், தனது அண்ணன் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவு 1.00 மணிக்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க பூட்டு, உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் நகை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இது குறித்து முகமது சபீர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்தில், கோவை எஸ்.பி.,உமா, கூடுதல் எஸ்.பி., அண்ணாதுரை ஆகியோர் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை கொண்டு, ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதே பகுதியில் சக்தி நகரில் வசிப்பவர் பத்மநாபன்; தனியார் நிறுவன அக்கவுண்டண்ட். இவருடைய வீட்டில் நேற்று முன்தினம் இரவு, திருட முயற்சி நடந்தது. சத்தம் கேட்டு, ஆட்கள் வந்ததால் திருடர்கள் தப்பினர். இதே போல அஸ்வினி என்பவருடைய வீட்டிலும் திருட முயற்சி நடந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி, கவுண்டம்பாளையம், முருகன் நகர் 5 வது குறுக்கு தெருவில் வசிக்கும் குழந்தைசாமி(50) என்பவருடைய வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் ரொக்கம், 45 பவுன் நகை, 200 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன. அதே நாளில், அதே பகுதியில் எம்.கே.பி., கார்டனில் வசிக்கும் சங்கரசுப்பு என்பவருடைய வீட்டில் திருட்டு நடந்தது. ஆனால், வீட்டுக்குள், நகை வைக்கப்பட்டிருந்த இடத்தை திருடர்களால் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், நகைகளை திருடர்கள் எடுத்து செல்லவில்லை. கவுண்டம்பாளையத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 7 இடங்களில் 115 பவுன் நகை, 14 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை திருட்டு போய் உள்ளது. திருட்டை தடுக்க முடியாமல் துடியலூர் போலீசார் திணறுகின்றனர். தொடர் திருட்டால் கவுண்டம்பாளையம் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.