/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி : மூவர் கைதுஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி : மூவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி : மூவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி : மூவர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி : மூவர் கைது
ADDED : ஆக 06, 2011 09:41 PM
விருதுநகர்: விருதுநகர் அருகே கணவன் மனைவியிடம் ஆசிரியர் வேலை வாங்கி
தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரை கைது செய்த
போலீசார்,மற்றவர்களை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே
நாராணபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகோபால். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இருவரும்
ஆசிரியர் பணியில் சேர்வதற்காக, சிவகாசி பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி
ஓவிய ஆசிரியர் குமரேசன் மூலம், இவரது நண்பர் சங்கரலிங்கபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளி இளநிலை உதவியாளர் சுப்புராஜிடம் 10 லட்சம் ரூபாய்
கொடுத்தனர்.
இதற்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர் திருமால், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முனியாண்டி(49) மற்றும்
இருவர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனிடையே, இவர்கள் தமிழகம் முழுவதும் 42
பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக, ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் மோசடி
செய்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து ஆனந்தகோபால், சென்னை சி.பி.சி.ஐ.டி.,
டி.ஜி.பி., சேகரிடம் புகார் செய்தார். அதன்படி, மதுரை சி.பி.சி.ஐ.டி.,
டி.எஸ்.பி., தமிழ்செல்வன் தலைமையில் போலீசார், ஓவிய ஆசிரியர் குமரேசன்,
சுப்புராஜ், முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்ளை தேடி
வருகின்றனர்.


