/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்
தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்
தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்
தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி கொலை மிரட்டல்
சிதம்பரம் : சிதம்பரம் அருகே தி.மு.க., பிரமுகரின் வீட்டை சூறையாடி, கொலை மிரட்டல் விடுத்த சமூக நலத்துறை அமைச்சரின் மருமகன் உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிதம்பரம் அடுத்த வால்காரமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு, 45; கீரப்பாளையம் ஒன்றிய தி.மு.க., துணை அமைப்பாளர்.
இதனை அறிந்த ராஜி, பாலுவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வால்காரமேடு கிராமத்திற்கு இன்னோவா மற்றும் டாடா சுமோ காரில் சென்ற 20 பேர் கொண்ட கும்பல், பாலுவின் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்து பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்களையும், வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர். மேலும், பாலுவை கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். இதுகுறித்து பாலுவின் சகோதரர் முருகன், 41; நேற்று மதியம் சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மருமகன் ராஜி என்கிற ராஜ்மோகன் மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர் மீது 147, 148, 448, 424, 294(பி), 506(11) ஆகிய 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


