Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்ஜி., கல்லூரிகளுக்கான விளையாட்டுகள்: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாம்பியன்

இன்ஜி., கல்லூரிகளுக்கான விளையாட்டுகள்: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாம்பியன்

இன்ஜி., கல்லூரிகளுக்கான விளையாட்டுகள்: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாம்பியன்

இன்ஜி., கல்லூரிகளுக்கான விளையாட்டுகள்: குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சாம்பியன்

ADDED : ஆக 09, 2011 02:50 AM


Google News

கோவை : அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான விளையாட்டுகளில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி மாணவ, மாணவியர் பிரிவில் தலா மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி சார்பில் 'குமரகுரு கோப்பை' மாணவ, மாணவியருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடந்தன.

மாவட்ட அளவில் 25 இன்ஜினியரிங் கல்லூரிகள் போட்டிகளில் பங்கேற்றன. மாணவர் பிரிவில் ஏழு போட்டிகளும், மாணவியர் பிரிவில் ஐந்து போட்டிகளும் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல், இரண்டாவது இடங்களை பெற்ற கல்லூரிகள் விவரம்:மாணவர் பிரிவில் கைப்பந்து போட்டியில் மகாலிங்கம் இன்ஜி.,கல்லூரி முதலிடத்தையும், இந்துஸ்தான் இன்ஜி., கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன. கூடைப்பந்து போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீராம கிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி. கால்பந்து போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி. கபடி போட்டியில் சி.ஐ.ஈ.டி., கல்லூரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி. இறகுப்பந்து போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, நேரு தொழில்நுட்ப கல்லூரி. டென்னிஸ் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஸ்ரீசக்தி இன்ஜி., கல்லூரி. ஹாக்கி போட்டியில் கற்பகம் பல்கலை, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி ஆகியன முறையே முதல், இரண்டாவது இடங்களை பெற்றன.மாணவியர் பிரிவில் த்ரோபால் மற்றும் ஐவர் கால்பந்து போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி முதலிடமும், மகாலிங்கம் இன்ஜி., கல்லூரி இரண்டாவது இடமும் பெற்றன. மேஜைப்பந்து போட்டியில் ஸ்ரீராம கிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, மகாலிங்கம் இன்ஜி.,கல்லூரி. வாலிபால் போட்டியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு இன்ஜி.,கல்லூரி. கூடைப்பந்து போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி ஆகியன முறையே முதல், இரண்டாவது இடங்களை பெற்றன.அர்ஜூனா விருது பெற்ற சர்வதேச கபடி வீரர் கணேசன் பரிசு வழங்கினார். கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்பர்ட் பிரேம்குமார் வரவேற்றார். விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் தரணிதரன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us