இலவச லேப்-டாப் வழங்க கண்காணிப்பு குழு : பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை
இலவச லேப்-டாப் வழங்க கண்காணிப்பு குழு : பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை
இலவச லேப்-டாப் வழங்க கண்காணிப்பு குழு : பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்னுரிமை
ADDED : ஆக 13, 2011 01:24 AM

ராமநாதபுரம் : தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்குவதற்கான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ஜெ., அறிவித்தார். இதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் கலெக்டர், டி.ஆர்.ஒ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அண்ணா பல்கலை டீன், அரசு கல்லூரி முதல்வர், உதவி பெறும் பாலிடெக்னிக் அல்லது அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆகியோர் இடம் பெறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அதே முறையை பின்பற்றி இலவச லேப்டாப் வழங்க முடிவு செய்து தனி வெப்சைட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 2011-12ம் ஆண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கும், கலைக்கல்லூரியில் பயிலும் முதல், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும், இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக பிளஸ் 1 மற்றும் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


