/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க போராட்டம்பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க போராட்டம்
பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க போராட்டம்
பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க போராட்டம்
பாலக்காடு ரோட்டை புதுப்பிக்க போராட்டம்
ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டையும், பாலத்தையும் புதுப்பிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் செந்தில்குமார், தாசில்தாரிடம் கொடுத்த மனு: பொள்ளாச்சி - பாலக்காடு செல்லும் பிரதான ரோடு என்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
ஆனால், இந்த ரோடு பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. பாலக்காடு ரோட்டில் ஜமீன்முத்தூர் அருகிலுள்ள பாலம் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், பழுதடைந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். கேரளாவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இந்த ரோட்டை மட்டுமே நம்பியுள்ளதால் பாலம் அபாயகரமாக உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். ஜமீன்முத்தூர் பாலத்தை புதுப்பிக்காவிட்டால் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


