ADDED : ஆக 17, 2011 01:29 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் புதிய தமிழகம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடந்தது.சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும், மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும், நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது.
புதுக்கோட்டை பொதுஅலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்டச் செயலாளர் தங்கவேலு துவக்கி வைத்தார். பேரணி பழைய பஸ் ஸ்டான்ட், புதிய பஸ் ஸ்டான்ட், மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, தெற்கு ராஜவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளை கடந்து மீண்டும் பொதுஅலுவலக வளாகத்தை அடைந்தது. பேரணியில் துணைச் செயலாளர்கள் குமரன், சவரணகுமார், பொருளாளர் ராமசாமி, நகரச் செயலாளர் சிவக்குமார் உட்பட வாலிபர்கள் பலர் பங்கேற்றனர்.