/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகைபட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை
பட்டதாரிகள் இல்லாத குடும்பத்தில்ஒருவருக்கு மட்டுமே உதவித்தொகை
ADDED : ஜூலை 23, 2011 03:13 AM
சாத்தான்குளம்: பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து உயர்கல்வி படிப்பதற்கு குடும்பத்திற்கு ஒருவருக்கு மட்டுமே உதவி வழங்கப்படும் என இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கில் கூறுவதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.பட்டதாரி இல்லாத குடும்பத்திலிருந்து இன்ஜி.,கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் பீஸ் கட்ட வேண்டியதில்லை என தமிழக அரசு சென்ற ஆண்டு அறிவுறுத்தியது. இதனால் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கலுகை கிடைத்தது. இதில் பட்டதாரி இல்லாத குடும்பம் என்று எப்படி கணக்கிடுவது என வருவாய்த்துறையினருக்கு அரசுவழிகாட்டி குறிப்பு வழங்கியது. அதன்படி படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர், தந்தை மற்றும் தாய்வழி தாத்தா, பாட்டி உடன்பிறந்தவர்கள் ஒருவர்கூட பட்டதாரியாக இல்லை என்றால் இந்த சலுகை வழங்கப்படும். மேலும் பட்டப்படிப்பு படித்து ஃபெயில் ஆனவர்கள், இடையில் நின்றவர்கள், தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள், பாலிடெக்னிக் போன்ற டிப்ளமோ பெற்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சலுகை பெற தகுதி உள்ளவர்கள். இதன்படி இந்த ஆண்டும் அந்த சலுகை தொடரும் என புதிதாக பொறுப்பேற்ற அரசும் அறிவித்தது.
அதன்படி தாசில்தாரிடம் சான்றிதழ் பெற்று இன்ஜி.,கல்லூரி கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தனர். அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கில் சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது ஏற்கனவே இந்தச் சலுகையைப் பெற்று வரும் மாணவர்களின் தம்பி தங்கைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது எனக் கூறி அவர்கள் இணைத்துள்ள பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழை அந்த மாணவர்களிடமே திருப்பி கொடுத்துவிடுகின்றனர். எனவே இவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சாத்தான்குளம் பாலசிங் கூறியதாவது,எங்கள் குடும்பத்தில் யாரும் பட்டதாரி இல்லை. எனது மகன் சென்ற ஆண்டு இன்ஜி.,கல்லூரியில் சேரும் பொழுது கல்விக் கட்டணச் சலுகையாக ரூ.20 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது. சென்ற வாரம் எனது இரண்டாவது மகளை இன்ஜி.,கல்லூரியில் சேர்க்க அண்ணா யூனிவர்சிட்டி கவுன்சிலிங்கிற்கு சென்றேன். அப்போது சான்றிதழ் சரிபார்க்கும் பொழுது எனது மூத்தமகன் கல்விக் கட்டணச்சலுகை பெற்றுள்ளதால் இரண்டாவது மகளுக்கு அந்தச் சலுகை கிடையாது எனக்கூறி பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் என இணைத்திருந்த சான்றிதழைத் திருப்பித் தந்து விட்டனர். இது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிராகரிக்கலாம் என கேட்டோம். அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான அறிக்கை விடவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கல்விக் கட்டணச் சலுகை என அறிவித்துவிட்டால் வீணாக சான்றிதழ்கள் கேட்டு பல்வேறு அலுவலங்களுக்கு பெற்றோர் அலைய வேண்டிய தேவை இருக்காது என கூறினார். ஒருவர் படித்து முடித்து பட்டம் பெற்றால் தான் பட்டதாரி ஆகமுடியும். படித்துக் கொண்டு இருப்பதை பட்டதாரி என கணக்கிடக் கூடாது என சென்ற ஆண்டு அரசு கூறியது. அதன் அடிப்படையில் தான் இந்த ஆண்டும் பட்டதாரி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் என சான்றிதழ்களை தாலுகா அலுவலகங்கள் வழங்கி வருகின்றது. இதில் தற்போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கல்விக் கட்டணச் சலுகை என கவுன்சிலிங்கின் போது கூறுவதால் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். எனவே அரசு இது சம்பந்தமாக தெளிவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் விரும்புகின்றனர்.


