Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேட்புமனு இன்று பரிசீலனை3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு14,300 பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு இன்று பரிசீலனை3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு14,300 பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு இன்று பரிசீலனை3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு14,300 பேர் வேட்புமனு தாக்கல்

வேட்புமனு இன்று பரிசீலனை3,577 உள்ளாட்சி பதவிகளுக்கு14,300 பேர் வேட்புமனு தாக்கல்

ADDED : செப் 30, 2011 01:44 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 3,577 உள்ளாட்சிப் பதிகளுக்கு, 14 ஆயிரத்து 300 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனுக்கள் மீதான பரிசீலனை, இன்று நடக்கிறது.நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், டவுன் பஞ்சாயத்து சேர்மன் மற்றும் கவுன்சிலர், நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர் என மொத்தம், 3,577 உள்ளாட்சிப் பதவியிடங்கள் உள்ளன.

அவற்றுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அதில், 17 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 149 வேட்பாளர்கள், 172 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடத்துக்கு, 1,176 வேட்பாளர், 322 பஞ்சாயத்து தலைவர்களுக்கு, 1,879, 2,595 வார்டு உறுப்பினர்களுக்கு, 8,316 வேட்பாளர், நகராட்சி சேர்மன் பதவிக்கு, 71 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.அதுபோல், 153 நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு, 1,080 வேட்பாளர், 19 டவுன் பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு, 188 வேட்பாளர், 294 டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு, 1,441 வேட்பாளர் மனுதாக்கல் செய்தள்ளனர். அதன்படி மொத்தம் உள்ள, 3,577 உள்ளாட்சிப் பதவிகளுக்கு, 14 ஆயிரத்து 300 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.அம்மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us