/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சிமென்ட் வினியோகம் 50 சதவீதம் குறைப்புசிமென்ட் வினியோகம் 50 சதவீதம் குறைப்பு
சிமென்ட் வினியோகம் 50 சதவீதம் குறைப்பு
சிமென்ட் வினியோகம் 50 சதவீதம் குறைப்பு
சிமென்ட் வினியோகம் 50 சதவீதம் குறைப்பு
ADDED : ஆக 01, 2011 11:51 PM
முதுகுளத்தூர் : ரேஷன் கார்டுகளுக்கு குறைந்த விலையில் வழங்கபட்டு வந்த சிமென்ட் மூடைகள் 50 சதவீதம் குறைக்கபட்டுள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் அவதிபட்டுள்ளனர்.
கிராம, நகர்புறங்களில் உள்ள நடுத்தர, ஏழைகளுக்கும், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வீடு பராமரிப்புகளுக்காக தலா 50 மூடைகள் குறைந்த விலையில் அரசு வழங்கியது. ஒவ்வொரு நுகர்பொருள் கிட்டங்கிகளுக்கும் தலா 240 டன்(4,800) சிமென்ட் மூடைகள் வழங்கபட்டன. தற்போது இந்த மூடைகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைக்கபட்டுள்ளது. போதிய அளவில் மூடைகள் கிடைக்கவில்லை. முதுகுளத்தூர் அரசு கிட்டங்கி உதவி தர ஆய்வாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை ரேஷன் கார்டுக்கு தலா 50 மூடைகள் வழங்கபட்டன. தற்போது குறைத்து வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, என்றார்.


