Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பார்வையற்றவர்களுக்காக இன்ஜினியரிங் கல்லூரி : ஆந்திராவில் துவங்க திட்டம்

பார்வையற்றவர்களுக்காக இன்ஜினியரிங் கல்லூரி : ஆந்திராவில் துவங்க திட்டம்

பார்வையற்றவர்களுக்காக இன்ஜினியரிங் கல்லூரி : ஆந்திராவில் துவங்க திட்டம்

பார்வையற்றவர்களுக்காக இன்ஜினியரிங் கல்லூரி : ஆந்திராவில் துவங்க திட்டம்

ADDED : ஜூலை 14, 2011 12:16 AM


Google News

ஐதராபாத் : ஆந்திராவில், பார்வையற்ற மாணவர்களுக்காக பிரத்யேகமாக, இன்ஜினியரிங் கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்றவர்களுக்கான தேவ்னர் பவுண்டேஷன், பார்வையற்ற மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக இன்ஜினியரிங் கல்லூரி தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தேவ்னர் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சாய்பாபா கவுட், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பார்வை குறைபாடு உடைய மாணவர்களுக்கு பாலிடெக்னிக் மற்றும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்படுகிறது. எனினும், சில மாணவர்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்த பின்னரே, இன்ஜினியரிங் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வழக்கமாகி விட்டது. எனவே, பார்வையற்ற மாணவர்களுக்கென்றே பிரத்யேகமாக இன்ஜினியரிங் கல்லூரி தொடங்க, தேவ்னர் பவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த, பார்வையற்ற மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே, பல்வேறு சிரமங்களுக்கு இடையே தங்களது படிப்பை முடித்த பார்வையற்ற மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். சில மாணவர்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில், இன்ஜினியரிங் படித்து வருகின்றனர். அவர்களுக்கு உள்ள சிரமங்களை போக்குவதற்காகவே, பிரத்யேக கல்லூரி தொடங்கப்படுகிறது. இவ்வாறு சாய்பாபா கவுட் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us